சபரிமலையில், 11 கோடியே 65 லட்ச ரூபாய் நாணயங்கள் மூலம் காணிக்கையாக கிடைக்கப்பெற்றதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. கடந்த 5-ம் தேதி நாணயங்களை எண்ணும் பணி தொடங்கியது. சுமார் 400 ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்ட நிலையில், அவர்களுக்கான செலவே ஒரு கோடியை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை உட்பட பல்வேறு நாடுகளின் நாணயங்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். அவற்றை எண்ணும் பணி நடைபெறவுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.