கேரள ஐகோர்ட்டில் நடிகை ரஞ்சனி மனு

Update: 2024-08-17 10:10 GMT

கேரள திரைத்துறையில் பெண்களின் நிலை தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகை ரஞ்சனி, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கேரளாவில் நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அடுத்து, திரைத் துறையில் பணியாற்றும் பெண்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018-ஆம் ஆண்டு கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம், கடந்த 2019-ஆம் ஆண்டு அறிக்கையை மாநில அரசிடம் தாக்கல் செய்த போதிலும், அதில் நடிகைகளின் தனிப்பட்ட விஷயங்கள் இருப்பதால், நான்கரை ஆண்டுகளாக மாநில அரசு வெளியிடாமல் உள்ளது.

இந்த விவகாரத்தில், தகவல் உரிமை ஆணையம் தலையிட்டு, சர்ச்சைகுரிய விஷயங்களை தவிர்த்து விட்டு பிற விஷயங்களை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியது.

இந்நிலையில், ஹேமா கமிட்டி அறிக்கை, இன்று வெளியாக உள்ள நிலையில், நடிகை ரஞ்சனி, கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அதில், ஹேமா குழுவிடம் வாக்குமூலம் அளித்த நடிகைகளுக்கு ஒரு பிரதியை அளித்து, அவர்களின் சம்மதத்தை பெற்று, அந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை பரிசீலிக்கவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்