தேர்தல் வரும் நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிப்படை பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்... கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அதிநவீன இருதய கேத் லேப் ஆய்வகத்தை துவக்கி வைத்த அவர், செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்... இம்மருத்துவமனையில் 687 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், 88 ஆயிரம் புறநோயாளிகள் பயன்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்... மேலும், 447 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மருத்துவமனை நவீனப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்