"உடனடியாக ஆஜராக வேண்டும்..இல்லையென்றால்..." ஜார்கண்ட் முதல்வருக்கு E.D அனுப்பிய நோட்டீஸ்

Update: 2024-01-27 14:46 GMT

விசாரணைக்கு ஆஜராவது தொடர்பாக, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத்துறை மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. நில மோசடியில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,

ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்நிலையில், வரும் 29 தேதி அல்லது 31ம் தேதி விசாரணைக்கு ஆஜராவது குறித்து ஹேமந்த் சோரன் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், விசாரணை நடத்தும் தேதியை தாங்களே முடிவு செய்ய நேரிடும் என்றும் அமலாக்கத்துறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்