இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா கொல்லப்பட்டதை கண்டித்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துருக்கி மற்றும் பாலஸ்தீன நாடுகளின் கொடிகளை கைகளில் ஏந்தியபடி அவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இரான்
அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற இஸ்மாயில் ஹனியா
டெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த போது இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில்
கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் பங்கேற்ற இந்த ஆர்பாட்டத்தால்
இஸ்தான்புல் நகரில் பதற்றம் ஏற்பட்டது.