"ஈவ்னிங் இந்தியர்களுக்கு புதிய பெருமை.." உற்று நோக்கும் உலக நாடுகள்

Update: 2024-02-17 05:51 GMT

"ஈவ்னிங் இந்தியர்களுக்கு புதிய பெருமை.." உற்று நோக்கும் உலக நாடுகள்

வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இது ஜிஎஸ்எல்வி எப்-14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 27.30 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று பிற்பகல் 2.05 மணிக்கு தொடங்கியது. இன்சாட்-3டிஎஸ் மொத்தம் 2,275 கிலோ எடை கொண்டது. இதில் 6 இமேஜிங் சேனல்கள் உட்பட 25 விதமான ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வானிலைக்கான தகவல்களை துல்லியமாக வழங்கும் என்றும், புயல், கனமழை உட்பட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விண்ணில் செயல்பாட்டில் உள்ள இன்சாட்-3டி, 3டிஆர் செயற்கைக்கோள்களின் தொடர்ச்சியாக இந்த 3டிஎஸ் விண்ணில் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்