இந்தியா-இலங்கை இடையேயான மீண்டும் பன்னாட்டு பயணியர் படகு சேவை தொடங்கப்படுகிறது. கடந்தாண்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பன்னாட்டு பயணிகள் படகு சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சேவை பலமுறை நிறுத்தப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் 15 ஆம் தேதிக்கு பிறகு தொடங்கப்படுகிறது. இதற்காக அந்தமானில் இருந்து நாகப்பட்டினம் வந்த சிவகங்கை என பெயரிடப்பட்ட சிறியரக கப்பல் வந்துள்ளது. அதில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு சோதனை ஓட்டம் துவங்கியது. கப்பலில் 133 இருக்கைகள் கொண்ட சாதாரண வகுப்பில் ஒரு நபருக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் எனவும் 27 இருக்கை கொண்ட பிரீமியம் வகுப்பில் ஒரு நபருக்கு கட்டணம் 7 ஆயிரத்து 500 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. மூன்று மணி நேரத்தில் இலங்கை செல்லலாம் என்ற சூழலில், இருநாட்டை சேர்ந்த வணிகர்கள், சுற்றுலா பயணிகள் இடையே படகு சேவை எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது...