மாநில எல்லையில் குவிந்த போலீஸ்.. குடியரசு தினத்தை முன்னிட்டு உச்சகட்ட அலர்ட்டில் இந்தியா
நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படும் சூழ்நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தை சுற்றி உள்ள மூன்று மாநில எல்லைப் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியானது கேரள, கர்நாடக எல்லையில் அமைந்துள்ளதால், அங்கு துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சந்தேகத்துக்கு இடமான வாகனங்களை நிறுத்தி, தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர்