"இந்தியாவால் தான் உலகமே சுழல்கிறது" - பிரதமர் மோடி

Update: 2023-08-15 07:50 GMT

கடந்த ஐந்து ஆண்டுகளில் 13 கோடியே 50 லட்சம் பேர் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, நமது செயல்பாடுகள் அடுத்த ஆயிரம் ஆண்டு காலத்தை தீர்மானிக்கும் என்றும்

வாக்களித்த மக்களின் நம்பிக்கையை காப்பாற்றி மாற்றங்களை கொண்டு வந்தோம் எனவும் தெரிவித்தார்.

இயற்கை பேரிடர்கள் அசாராதமான சவால்களை ஏற்படுத்தியுள்ளதாகவும்,

கொரோனா காலத்திற்கு பிறகு உலகத்தை இந்தியா வழிநடத்துவதாகவும் பிரதமர் கூறினார்.

மணிப்பூரில் தற்போது அமைதி திரும்பிக் கொண்டு இருப்பதாக தெரிவித்த பிரதமர்,

மணிப்பூர் மக்களின் பக்கம் நாடு இருப்பதாகவும், அமைதி நீடிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தியாவிற்கு நிலையான மற்றும் வலுவான அரசு தேவை எனவும்,

வளர்ச்சிக்கு பெரும்பான்மை கொண்ட அரசு அமைய வேண்டியது மிகவும் அவசியம் எனவும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இளையோர் சக்தியின் காரணமாக ஸ்டாட்டப் நிறுவனங்களின் பட்டியலில் இந்தியா உலக அளவில் 3 வது இடத்தில் உள்ளதாகவும்,

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பற்றி உலகம் அறிந்து கொள்ள விரும்புகிறது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்தியாவின் உயர்வும் வளர்ச்சியும் உலக நாடுகள் மத்தியில் நமது நாடு மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது எனவும்

ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்கும் உன்னத வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

நாட்டில் வாய்ப்புகளுக்கு பஞ்சமே இல்லை என்றும்

எல்லையற்ற வாய்ப்புகளை வழங்குவதற்கான திறன் இந்தியாவிடம் உளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஊழல் என்ற ராட்சசன் இந்தியாவை பின்னுக்கு தள்ளிய நிலையில் அவற்றை விரட்டி அடித்ததாகவும்

ஏழைகளின் வீடுகள் வழங்கும் திட்டத்திற்காக முன்பை விட நான்கு மடங்கு பணம் செலவழிக்கப்பட்டு வருகிறது எனவும் பிரதமர் தெரிவித்தார்.

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 10 கோடி பெண்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும்

ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தின் கீழ் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

மேலும் , கடந்த ஐந்து ஆண்டுகளில் 13 கோடியே 50 லட்சம் பேர் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

"உலகத்தையே இந்தியா வழிநடத்துகிறது "

"நமது செயல்பாடுகள் அடுத்த

ஆயிரம் ஆண்டு காலத்தை தீர்மானிக்கும்"

"வாக்களித்த மக்களின் நம்பிக்கையை

காப்பாற்றி மாற்றங்களை

கொண்டு வந்தோம்"

"இயற்கை பேரிடர்கள் அசாராதமான

சவால்களை ஏற்படுத்தியுள்ளன"

"கொரோனா காலத்திற்கு பிறகு

உலகத்தை இந்தியா வழிநடத்துகிறது"

"மணிப்பூரில் தற்போது அமைதி

திரும்பிக் கொண்டு இருக்கிறது"

"மணிப்பூரில் அமைதி நீடிக்க

அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் "

"இந்தியாவிற்கு நிலையான மற்றும்

வலுவான அரசு தேவை "

"வளர்ச்சிக்கு பெரும்பான்மை

கொண்ட அரசு அமைய வேண்டியது

அவசியம்"

"ஸ்டாட்டப் நிறுவனங்களின்

பட்டியலில் இந்தியாவுக்கு 3 வது இடம் "

"டிஜிட்டல் இந்தியா திட்டத்தை

பற்றி உலகம் அறிந்து கொள்ள

விரும்புகிறது"

"உலக நாடுகள் மத்தியில் இந்தியா

மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது"

"ஜி 20 நாடுகளின் தலைமை

பொறுப்பை ஏற்கும் உன்னத வாய்ப்பு

இந்தியாவிற்கு கிடைத்துள்ளது"

"நாட்டில் வாய்ப்புகளுக்கு பஞ்சமே இல்லை"

"ஊழல் நாட்டில் இருந்து

விரட்டி அடிக்கப்பட்டுள்ளது"

"ஏழைகளின் வீடுகள் வழங்கும்

திட்டத்திற்காக முன்பை விட

4 மடங்கு பணம் செலவீடு"

"முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ்

10 கோடி பெண்களுக்கு கடன் உதவி "

"ஒன் ரேங்க் ஒன் பென்ஷன்

திட்டத்தின் கீழ் ரூ.70 ஆயிரம் கோடி செலவு"

"13.50 கோடி பேர் வறுமையில் இருந்து

விடுவிப்பு"

Tags:    

மேலும் செய்திகள்