கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவானது அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று, கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவானது 17 ஆயிரத்து 718 கனஅடியாக இருந்தது. இந்நிலையில் கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடியும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 13 ஆயிரத்து 145 கனஅடியும் நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வெளியேற்றப்படும் நீரின் அளவானது18 ஆயிரத்து145 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.