வருமான வரி விதிப்பு தொடர்பாக காங் செய்திருந்த மேல்முறையீடு...உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு
வருமான வரி விதிப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சி செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுப்படி செய்துள்ளது.
2014 முதல் 2017 வரையிலான, காங்கிரஸ் கட்சியின்
வருமான வரி தாக்கல் கணக்குகளை வருமான வரித்
துறை மறுபரிசீலனை செய்தது. காங்கிரஸ் கட்சி 250
கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளதாக கண்டறிந்து, 100 கோடி ரூபாய் வருமான வரி செலுத்த நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து வருமான வரி மேல்முறையீடு ஆணையத்தில் காங்கிரஸ் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த இரண்டு
நீதிபதிகள் அடங்கிய அமர்வு, காங்கிரஸின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸின் நிதி ஆதாரங்களை முடக்கி, அதை செயலிழக்க பாஜக அரசு சதி செய்வதாக வியாழன் அன்று சோனியா காந்தி குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.