பணம், நகையுடன் ஓடிய மனைவி... போலீசிடம் சென்ற காதல் கணவன் - பின்னணி என்ன .?

Update: 2024-05-12 02:11 GMT

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே காதல் கணவர் மற்றும் 3 குழந்தைகளை விட்டுவிட்டு, 18 லட்ச ருபாய் பணம், 15 சவரன் தங்க நகையுடன் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். மேக்காமண்டபத்தை சேர்ந்த விபின் - நிஷா, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், விபின் கடன் சுமையால் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால், வீட்டை விற்று 18 லட்சம் திரட்டிய விபின், அதனை மனைவியிடம் கொடுத்து விட்டு சென்னைக்கு பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், வெளியில் செல்வதாக கூறி பணம் மற்றும் நகையுடன் சென்ற நிஷா, மாயமானதால், அவரது கணவர் போலீசில் புகாரளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்