கடலுக்குள் சிக்கி கொண்ட கார்... முத்தி போன ரீல்ஸ் வெறி.. வைரலாகும் வீடியோ
குஜராத்தில் கடற்கரையில் ரீலிஸ் செய்ய முயன்ற போது கார்கள் அலையில் சிக்கிக்கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள முந்த்ரா கடற்கரையில் இரண்டு இளைஞர்கள் ரீலிஸ் எடுப்பதற்காக தங்களது கார்களை கடற்கரையில் ஓட்டி சென்றுள்ளனர். அப்போது கடல் அலைகள் இரண்டு வாகனங்களையும் மூழ்கடித்ததால், அவை தண்ணீரில் சிக்கிக்கொண்டன. அருகில் இருந்தவர்கள் கார்களை மீட்டெடுக்க உதவியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, கட்ச் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..