கூகுள் நிறுவனத்திற்கு ரூ.1,338 கோடி அபராதம் - இந்திய போட்டி ஆணையம் அதிரடி

Update: 2022-10-21 12:22 GMT

போட்டி நிறுவனங்களை சட்ட விரோதமான முறையில் நசுக்கியதற்காக கூகுள் மீது இந்திய போட்டி ஆணையம் அபராதம் விதித்துள்ளது.

கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான ஆன்ட்ராய்ட் ஓ.எஸை கொண்ட கைபேசிகளில், இதர வகை ஓ.எஸ்களை பயன்படுத்த கூகுள் நிறுவனம் விதித்த கட்டுப்பாடுகள் சட்ட விரோதமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப், கூகுள் மேப்ஸ், ஜிமெயில் போன்ற செயலிகளை ஆன்ட்ராய்ட் கைபேசி உற்பத்தியாளர்கள் நிறுவ வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர்.

இதன் அடிப்படையிலும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கைபேசி உற்பத்தி நிறுவனங்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூகுள் நிறுவனத்திற்கு இந்திய போட்டி ஆணையம்

உத்தரவிட்டுள்ளது. ஆன்ட்ராய் போன் பயன்படுத்துபவர்களுக்கு, கூகுள் நிறுவன செயலிகளை செயலிழக்க செய்யும் உரிமை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக 10 அம்சங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறைகளை கூகுளிற்கு அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்