பாரத் மண்டபத்தில் தண்ணீர் தேங்கியதன் மூலம், கடவுள் பிரதமர் மோடியிடம் ஈகோவை குறைத்து கொள்ளுங்கள் என கூறியிருப்பதாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் நிவாய் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சென்று திரும்பும்போதெல்லாம் நமது மரியாதை உயர்ந்து விட்டதாக கூறுகிறார் எனவும், ஆனால் அவர் அங்கு சென்று தொழிலதிபர்களான தனது நண்பர்களுக்காக ஒப்பந்தம் செய்தார் என்பது, பின்னரே தெரியவருகிறது எனவும் விமர்சித்தார். பாரத் மண்டபத்தில் தண்ணீர் தேங்கியதை சுட்டிக்காட்டிய பிரியங்கா காந்தி, அதன்மூலம் கடவுள் பிரதமர் மோடியிடம், ஈகோவை குறைத்துக்கொள்ளுங்கள், மக்களை உயர்ந்த இடத்தில் வையுங்கள் என கூறியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.