நிர்வாணமாக வீடியோ கால் பேசிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி - டேட்டிங் APP வைத்த ஆப்பு
டேட்டிங் ஆப் மூலம் பழகி, திருமணம் செய்துகொள்ளுமாறு இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த சென்னையை சேர்ந்த இளைஞரை புதுச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த திலீப் குமார் என்பவர் டேட்டிங் ஆப் மூலம் புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவரிடம் பழகியுள்ளார். அவரிடம் நிர்வானமாக வீடியோ கால் வர செய்து, அதனை ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்து மிரட்டல் விடுத்துள்ளார். திருமணம் செய்துகொள்ளாவிட்டால், சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து, அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை திருவொற்றியூரில் இருந்த திலீப் குமாரை, புதுச்சேரி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.