ககன்யான்-விண்வெளியில் மனிதர்கள் - 3 டன்.. மாதிரி கலன் ரெடி - அடுத்தகட்ட சோதனையில் இஸ்ரோ

Update: 2023-10-07 11:52 GMT

ககன்யான் திட்டப் பணிக்கான ஆளில்லா ராக்கெட் சோதனையை தொடங்க உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான தொழில்நுட்ப உபகரண கட்டமைப்பை சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் வடிவமைத்து இஸ்ரோவிடம் வழங்கியுள்ளது. புவியின் தாழ்வட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் மனிதா்களை அனுப்பி, 3 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்படும். பூமிக்குத் திரும்ப வரும்போது, கடலில் விண்கலத்தை இறக்கி வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில், ஒருங்கிணைந்த தரையிறங்கும் சோதனைக்கான மாதிரி கலன், சென்னையை சேர்ந்த நிறுவனம் சார்பில் தயாரிக்கபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில், 3 டன் எடை கொண்ட மாதிரி கலன் உருவாக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டா் மூலம் 4 கிலோமீட்டர் உயரத்துக்கு இந்த மாதிரி கலன் கொண்டு செல்லப்பட்டு, மேலிருந்து கடலில் விடப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள், சாதக, பாதகங்களை ஆய்வு செய்து அடுத்தக்கட்ட சோதனை முன்னெடுக்கப்பட உள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்