தந்தையை கீழே இழுத்துப்போட்டு கம்பியால் சரமாரியாக அடித்த கும்பல் - "வேண்டாம்.. வேண்டாம்" கதறிய மகன்
பஞ்சாப் மாநிலம் மான்சாவில், மகனை பள்ளியில் விடுவதற்காக, இருசக்கர வாகனத்தில் தந்தை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பின்தொடர்ந்து சென்ற சிலர், அவரை தடுத்து நிறுத்தி சட்டையை பிடித்து கீழே இழுத்தனர். ஏற்கனவே அந்த இடத்தில் இருந்த மற்ற சிலரும் சேர்ந்து, சிறுவன் முன்பாகவே தந்தையை கட்டையால் அடித்து தாக்கியுள்ளனர். அங்கிருந்த ஒரு பெண் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவுடன், 6 பேர் கொண்ட கும்பல் தப்பியோடினர். காயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தனிப்பட்ட விரோதம் காரணமாக தாக்குதல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.