24 மணி நேரம்.. காங்கிரஸ் MLA-ஐ நகரவிடாத ED.. ஒரே நேரத்தில் தமிழகம், கர்நாடகாவில் பரபரப்பு

Update: 2024-02-11 09:22 GMT

பெல்லாரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் நாரா பரத் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டில் உள்ள பரத் ரெட்டியின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான உறவினர் வீடுகளிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. நேற்று காலை தொடங்கிய இந்த சோதனை, 24 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் மற்றும் வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது.....

Tags:    

மேலும் செய்திகள்