பெண் மருத்துவருக்கு ஆபாச டார்ச்சர்.. கணவரை அதிர வைத்த கல்லூரி நண்பர்

Update: 2024-08-30 06:51 GMT

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பெண் மருத்துவருக்கு கடந்த ஆண்டு மருத்துவர் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. அண்மையில் இவர்களுக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப்பில் ஒருவர் ஆபாச புகைப்படங்கள் மற்றும் தரக்குறைவாக பேசி குறுஞ்செய்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண்ணின் கணவர் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், 2015ஆம் ஆண்டு புதுச்சேரியில் மருத்துவக் கல்வி படிக்கும்போது, பெண் மருத்துவருடன் நட்பாக பழகிய கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த மருத்துவர் சுரேஷ்குமார் என்பவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்