மருத்துவர் வந்தனா தாஸ் கொலை வழக்கு... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Doctor Attacked | Kerala
கேரள மாநிலம் கொல்லம் அருகே, மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துவரப்பட்ட குற்றவாளி, சிகிச்சை அளித்த மருத்துவரை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை திருப்திகரமாக இல்லையென குற்றம்சாட்டியுள்ள வந்தனாவின் பெற்றோர், சிபிஐ விசாரணை கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வந்தனாவின் பெற்றோர் அளித்த புகாரின் மீது விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டார். மேலும் வழக்கு டைரியை சரிபார்க்கவும் அறிவுறுத்தினார். டிஜிபி அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணை கோரிக்கையின் மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது