காதல் மனைவிக்கு அணு அணுவாய் சித்திரவதை... கேவலமான ஆசையால் சிதைத்து கொலை செய்த கொடூரன்

Update: 2024-02-15 10:57 GMT

கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியை சேர்ந்தவர் பவித்ரா. இவரும் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திருமணமான சில வருடங்களிலே மனைவியிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்த லோகேஷ், பவித்ராவை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தன் தாய் வீட்டில் வசித்து வந்த பவித்ரா, கணவர் மீது போலீசில் புகாரளித்த நிலையில், விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாட இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று பணிக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த பவித்ராவை வழிமறித்து தகராறு செய்த லோகேஷ், அவரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தலைமறைவாக உள்ள அவரின் கணவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்