வயிறு வீங்கி உயிருக்கு போராடிய பசு..மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்த சிகிச்சை
ஒடிசாவின் பெர்ஹாம்பூரில், வயிறு வீங்கிய நிலையில் இருந்த பசுவின் வயிற்றில் 30 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரம் வயிறு வீங்கிய நிலையில் இருந்த பசுவை பொதுமக்கள் கால்நடை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பசு கர்ப்பமாக இருப்பதாக நினைத்து அதற்குரிய சிகிச்சையளித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பசுவின் குடலில் சுமார் 30 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது கண்டறியப்பட்டு பின் அவை அகற்றப்பட்டன