கொரோனா நோய் தொற்று - மத்திய சுகாதார அமைச்சரகம் வெளியிட்ட புதிய தகவல்
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 20 ஆயிரத்து 408 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது...
கொரோனா நோய் தொற்று - மத்திய சுகாதார அமைச்சரகம் வெளியிட்ட புதிய தகவல்
- கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 20 ஆயிரத்து 958 பேர் குணமாகி உள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4.33 கோடியாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றுக்கு 44 பேர் பலியாகியுள்ளனர்.
- கொரோனா நோயில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 98.48 சதவீதமாக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1.43 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- கொரோனா சோதனைகளில், தினசரி நோய் உறுதி விகிதம் 5.05 சதவீதமாகவும், வாரந்திர நோய் உறுதி விகிதம் 4.92 சதவீதமாகவும் உள்ளன.
- கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 4.04 லட்சம் பேரிடம் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.
- இந்தியாவில் இதுவரை 203.94 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளது.