"வரும் டிசம்பர் இறுதிக்குள்..." - நிதின் கட்கரி சொன்ன முக்கிய அப்டேட் | Nitin Gadkari

Update: 2023-10-01 08:46 GMT

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளங்கள் இல்லாததாக மாறிவிடும் என

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார்...


தூய்மையே சேவை என்ற நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்கரி, டிசம்பர் இறுதிக்குள் பள்ளங்கள் இல்லாத தேசிய நெடுஞ்சாலைகளை உறுதி செய்யும் விதமாக கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் இந்தத் திட்டத்தை வெற்றி பெற செய்வதில் இளம் பொறியாளர்களும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். 1 லட்சத்து 46 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் வரைபடத்தை மத்திய அரசு தயாரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு டிசம்பருக்குள் பள்ளங்களை அகற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்... ஒப்பந்ததாரர்களின் செயல் திறன் அடிப்படையிலும் குறுகிய கால அளவிலும் ஒப்பந்தங்கள் அளிப்பதில் நெடுஞ்சாலை அமைச்சகம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த அவர், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வடிகால் பிரச்சினைகள் குறித்து புதிய கொள்கை ஆராயப்படும் என்றும் சாலை அமைப்பதில் நகராட்சி கழிவுகளை பயன்படுத்துவதற்கான மற்றொரு கொள்கை செயல்படுத்தப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்... மேலும் மாற்று எரிபொருளைப் பயன்படுத்தி கட்டுமான இயந்திரங்களை ஊக்குவிக்கும் கொள்கைக்கான வரைவு தயாரிக்கப் பட்டுள்ளதாகவும், விரைவில் அது நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என்றும் கட்கரி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்