ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நடத்துனர் சம்பவ இடத்திலேயே பலி-திக் திக் காட்சி

Update: 2023-08-31 00:16 GMT

ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நடத்துனர் பலியான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தை சேர்ந்தவர் ஈரய்யா. இவர் மங்களூரு நகர பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று பேருந்து கர்நாடக பாலிடெக்னிக் பகுதியில் உள்ள நந்தூர் வளைவில் வேகமாக திரும்பிய போது, முன்பக்க வாசலில் நின்று கொண்டிருந்த ஈரய்யா எதிர்பாராதவிதமாக சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்து அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்தின் அதீத வேகமே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். தற்போது அந்த காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்