`மூளை.. நாசவேலைக்கு பகீர் பிளான்'...நாட்டையே அதிரவிட்ட இளைஞர் - தீர்ப்பு என்ன?

Update: 2024-02-08 07:27 GMT

கேரளாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த குற்றவாளிக்கு என்.ஐ.ஏ. நீதிமன்றம் இன்று (பிப்.8) தண்டனை வழங்கவுள்ளது.கேரளாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக கொல்லம்கோட்டை பகுதியைச் சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் என்பவரை 2018ல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில், அவர் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதும், கேரளாவிலும் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த திட்டம் தீட்டியிருந்ததும் அம்பலமானது. மேலும் அவர் சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்களை வேலைக்கு அமர்த்த முயன்றதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டு, சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட ரியாஸ் அபுபக்கர் குற்றவாளி என தீர்ப்பளித்த என்.ஐ.ஏ. நீதிமன்றம், தண்டனையை இன்று அறிவிக்கவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்