கேரளாவில் கடல் அலையில் சிக்கி படகு கவிழ்ந்த விபத்தில் 16 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். திருவனந்தபுரம் அருகே முதலப்பொழி பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், வர்க்கலா பகுதியைச் சேர்ந்த 16 மீனவர்கள் படகில் மீன்பிடிக்க சென்றபோது சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. கடல் அலையில் சிக்கி படகு திடீரென கவிழ்ந்தது. கடலோர காவல் படையினரின் உதவியுடன் 16 பேரும் மீட்கப்பட்டனர். காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீன்வளத்துறையின் எச்சரிக்கையையும் மீறி கடலுக்குச் செல்வதால் இதுபோன்ற விபத்துகள் நேரிடுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.