வடகாசியில் மோடி இருக்க தென்காசிக்கு பாஜக போடும் பக்கா ஸ்கெட்ச் - மல்லுக்கட்டும் திமுக, அதிமுக

Update: 2024-02-28 04:57 GMT

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில்... இன்றைய உங்கள் தொகுதி, உண்மை நிலவரம் பகுதியில் தென்காசி தனி தொகுதி குறித்து விரிவாக காணலாம்...

தென்காசி... தென்றல் தவழும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய இயற்கை வளங்களை கொண்ட தொகுதி.

புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் திருத்தலம்... சிவனின் சித்திரை சபையுள்ள குற்றாலநாதர் கோயில்... சங்கரன்கோயில் சங்கரநாராயண சுவாமி, இலஞ்சி குரமன் கோயில் உள்ளிட்ட புரதான கோயில்கள்... குற்றாலம் அருவிகள், குண்டாறு, அடவிநயினார், கருப்பா நதி, வாசுதேவநல்லூர் தலையணை... என சுற்றுலா தலங்களையும் கொண்ட தொகுதி...

பொதிகையில் பிறப்பெடுக்கும் சிற்றாறு... சிறு ஆறுகளால்... நெல், வாழை, மா, பலா, பூக்கள் விளையும் விவசாய பூமி. விவசாயமே தொகுதி மக்களின் பிரதான தொழிலாக உள்ளது.

தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குள், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் என ஆறு சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன..

7,42,158 ஆண் வாக்காளர்கள்... 7,73,822 பெண் வாக்காளர்கள், 203 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 15,16,183 வாக்காளர்கள் தொகுதியில் உள்ளனர்.

1957 முதல் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் தொகுதியில்.. காங்கிரஸ் கட்சியே அதிகமுறை வென்றிருக்கிறது.

1957 தேர்தலில் காங்கிரசை சேர்ந்த எம். சங்கரபாண்டியன், 1962 தேர்தலில் காங்கிரசை சேர்ந்த எம்.பி. சாமி, 1967 காங்கிரசை சேர்ந்த ஆர். எஸ். ஆறுமுகம், 1971 தேர்தலில் காங்கிரசை சேர்ந்த செல்லச்சாமியும் வென்று எம்.பி. ஆகினர். 1977 தேர்தலில் காங்கிரசை சேர்ந்த மூ. அருணாச்சலம் எம்.பி. ஆனார். தொடர்ந்து, 1980, 1984, 1989, 1991, 1996 தேர்தல்களிலும் வென்று எம்பியாக தொடர்ந்தார். மூ. அருணாச்சலம் தொகுதியில் அதிக முறை எம்.பியாக இருந்தவர். 1996 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார் மூ. அருணாச்சலம்.. .

1998, 1999 தேர்தல்களில் அதிமுகவை சேர்ந்த முருகேசனும், 2004 தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டை சேர்ந்த அப்பாதுரையும், 2009 தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டை சேர்ந்த பி.லிங்கமும் வென்றனர். 2014-ல் அதிமுகவை சேர்ந்த வசந்தி முருகேசனும், 2019 தேர்தலில் திமுகவை சேர்ந்த தனுஷ் குமாரும் வென்று எம்.பி. ஆகினர்.

தேர்தலில் 4,76,156 வாக்குகளை பெற்று வெற்றியை வசமாக்கியிருந்தார் தனுஷ் குமார். அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி 3,55,389 வாக்குகளையும், அமமுக வேட்பாளர் பொன்னுத்தாயி 92,116 வாக்குகளையும், நாம் தமிழர் வாக்காளர் மதிவாணன் 59,445 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

கிருஷ்ணசாமியை 1,20,767 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தார் தனுஷ்குமார்.

2019 தேர்தல் பிரசாரத்தில் விவசாயிகளை மையமாக வைத்து பிரசாரம் செய்த தனுஷ் குமார், மக்களின் நீண்டகால கோரிக்கையான செண்பகவல்லி அணையை சரிசெய்ய நடவடிக்கை, திருமங்கலம்-கொல்லம் சாலையை மாற்று பாதையில் செயல்படுத்த நடவடிக்கை, விவசாய நிலங்களுக்குள் காட்டு விலங்குகள் வருவதை தடுக்க நடவடிக்கை, சங்கரன்கோயிலில் விசைத்தறி தொழில் பூங்கா அமைய நடவடிக்கை... நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை... படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

இப்போது நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட.. தொகுதி நிலவரம் குறித்து அறிய மக்களை சந்தித்த போது... பெயரளவுக்குதான் மாவட்டம்... இங்க ஒன்னும் கிடையாது என ஆதங்கப்பட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்