திருப்பதியில், 650 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேம்பாலத்தை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார். தேவஸ்தானம், திருப்பதி நகராட்சி இணைந்து, திருப்பதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் கட்டியுள்ளது. சீனிவாச சேது என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மேம்பாலத்தை காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, திறந்து வைத்தார். பின்னர், தேவஸ்தான ஊழியர்களுக்கு வீட்டு மனைகள் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.