பள்ளி ஆசிரியர் படுகொலை மகள் மேல் எழுந்த சந்தேகம்

Update: 2024-06-15 10:13 GMT

அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் துரைசாமி, தனது மகள் ஹரிதாவுடன் வசித்து வந்தார். மாடியில் உறங்கிய தந்தையை யாரோ கொலை செய்துவிட்டார்கள் என இளம்பெண், அழுதபடியே அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார். அவர்கள் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆசிரியர் துரைசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, அவரது மகள் ஹரிதாவிடம் விசாரித்தனர். தந்தை அதிக மது போதையில் இருந்ததால், மயங்கி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார். மாறி மாறி பதில் அளித்த ஆசிரியரின் மகள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்