காளஹஸ்தி எம்எல்ஏவான மதுசூதன் ரெட்டியின் ஆதரவாளரான ஹேம்ந்த ரெட்டி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காளஹஸ்தி சிவன் கோயிலுக்குச் சொந்தமான வெள்ளியை மதுசூதன் ரெட்டி கடந்த ஆண்டு தன்னிடம் கொடுத்ததாகவும், அந்த வெள்ளியை பெங்களூரில் உள்ள பாரதி என்ற பெண்ணிடம் கொடுத்ததாகவும் ஹேமந்த் ரெட்டி கூறியுள்ளார். அந்த பெண், இணையவழியில் மதுசூதன் ரெட்டிக்கு 10 லட்ச ரூபாய் அனுப்பியதற்கான சான்று தன்னிடம் இருக்கும் நிலையில், மதுசூதன் ரெட்டி மற்றும் அவர்களது குடும்பத்தினர் மிரட்டி வருவதாக ஹேமந்த் ரெட்டி கூறியுள்ளார். தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக திருப்பதி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்தும், இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். கோயிலுக்கு காணிக்கையாக நகைகளை தணிக்கை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், மதுசூதன் ரெட்டியின் நில ஆக்கிரமிப்பு குறித்த விவரங்களை வெளியிட இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.