1 கோடி மதிப்புள்ள செம்மர அடிவேர் திருத்தணியில் இருந்து ஆந்திரா கடத்தல் |அதிரடி காட்டிய போலீஸ்

ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மர அடி வேர்களை கடத்த முயற்சி/4 இடைத்தரகர்கள் கைது - ஆந்திர போலீஸ் அதிரடி

Update: 2022-06-01 12:08 GMT

திருத்தணியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மர அடி வேர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தாழவேடு கிராமத்தில் ராணி என்பவர் தனது நிலத்தில் வளர்க்கப்பட்ட செம்மரங்களை வனத்துறை அனுமதியுடன் விற்ற நிலையில், செம்மர வேர்களை விற்க அனுமதி கிடைக்காத‌தால் குடோனில் வைத்திருந்தார். அந்த வேர்களை விற்றுத் தருவதாக‌க் கூறி பேசிய இடைத்தரகர்கள் 4 பேர், 3 டன் செம்மர வேர்களை வேனில் ஏற்றி ஆந்திராவுக்கு கடத்த முயன்றனர். இதையறிந்து அவர்களை சுற்றி வளைத்து கைது செய்த ஆந்திர மாநில செம்மரம் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், செம்மர வேர்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்