சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1.. இஸ்ரோ கொடுத்த முக்கிய அப்டேட்.. நாளை தெரியும்...

Update: 2023-09-04 05:43 GMT

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலமாக இஸ்ரோ நேற்று விண்ணில் செலுத்தியது. பூமியிலிருந்து 648 கிலோ மீட்டர் உயரத்தில் பூமியின் முதல் சுற்று வட்ட பாதையில் விண்கலம் நிறுவப்பட்ட நிலையில், இன்று அதன் முதல் சுழற்சியை மேற்கொண்டுள்ளது. முதல் சுழற்சிக்கு பின்னர் 245 கிலோ மீட்டர் குறைந்தபட்ச தூரமாகவும், 22 ஆயிரத்து 459 கிலோமீட்டர் அதிகபட்ச தூரமாகவும் சுற்றுவட்ட பாதையில் ஆதித்யா விண்கலம் சுற்றி வருகிறது. வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு இரண்டாம் கட்டமாக ஆதித்யா வின்கலத்தின் சுற்றுவட்ட பாதை உயர்த்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்