அதிரடி ரெய்டு.. அலறும் அதிகாரிகள் - அள்ள அள்ள நகை.. கட்டுக்கட்டாக பணம் - கர்நாடகாவில் பரபரப்பு

Update: 2023-08-17 10:36 GMT

கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான 42 இடங்களில், லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், கர்நாடகாவின் சித்ரதுர்கா, தாவனகெரே, பிதர், தார்வாட் உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான 42 இடங்களில், லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது சித்திரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த நீர் பாசன துறை பொறியாளர் மகேஷ் என்பவரது வீட்டில் இருந்து, பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர பல சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனையின் முடிவிலே, ஒவ்வொரு அதிகாரிகள் வீட்டில் எவ்வளவு கைப்பற்றப்பட்டது என்பது குறித்த முழு விவரம் தெரிய வரும் என கூறப்படுகிறது...

Tags:    

மேலும் செய்திகள்