“ஏ வரியா..” பள்ளி சிறுமியிடம் ஈவ் டீசிங்... ரோமியோவை கண்டித்த தந்தைக்கு நேர்ந்த கொடூரம்

Update: 2023-09-04 15:01 GMT

பெங்களூர் நகரம் சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்வர் உசேன். இவரது 15 வயது மகளை அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஜாஹித் என்பவர் கடந்த 3 மாதங்களாக ஈவ்டீசிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி தனது தந்தையிடம் கூறியுள்ளார்... அன்வர், ஜாஹித்தின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று அவரைக் கண்டித்துள்ளார். ஆனால் அதன்பிறகு ஜாகித் அன்வரின் மகளுக்கு அதிகமாக தொந்தரவு கொடுக்கத் தொடங்கியுள்ளார். பள்ளிக்குச் சென்று வரும்போது எல்லாம் மகள் அழுது கொண்டே வருவதைப் பார்த்த அன்வர் வேறு வழியின்றி இந்த விவகாரத்தை ஜாஹித்தின் பெற்றோரிடம் கொண்டு செல்ல விரும்பினார். பெற்றோரிடம் அடுக்கடுக்காக புகார்களை அன்வர் கூறவே ஆத்திரமடைந்த ஜாஹித் வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு வந்து அன்வரின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் துடிதுடித்து அன்வர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் தப்பி ஓடிய ஜாஹித்தைத் தேடிப் பிடித்துக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்