கல்லூரி செல்ல விருப்பம் இல்லாத மாணவி எடுத்த விபரீத முடிவு

Update: 2023-10-03 11:18 GMT

புதுச்சேரியில், கல்லூரி செல்ல விருப்பம் இல்லாத காரணத்தால் மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அரியாங்குப்பம் பாரதி நகரை சேர்ந்த ராஜா - மங்களக்ஷ்மி தம்பதியினரின் மூத்த மகள் லோகேஸ்வரி, புதுச்சேரி பாரதிதாசன் அரசு கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் முதலாமாண்டு பயின்று வந்தார். இந்நிலையில், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்த லோகேஸ்வரி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கல்லூரியில் படிக்க விருப்பமின்றி, மன உளைச்சலில் இருப்பதாகக் கூறி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்