புதுச்சேரியை சேர்ந்த செல்வம் என்பவர், மதுபோதையில் பங்காரு வாய்க்கால் கரையில் வேடிக்கை பார்த்து நின்றதாக கூறப்படுகிறது. சிறிதுநேரம் கழித்து வாய்க்காலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது நீரோட்டம் அதிகமாகி அவர் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். சுமார் 10 மணி நேர தேடுதலுக்குப் பின் செல்வத்தின் உடலை தீயணைப்புத்துறையினர் சடலமாக மீட்டனர்.