சபரிமலையில் குவிந்த 5லட்சம் மக்கள்..அவசர காலகட்டங்களில் பக்தர்களை வெளியேற்ற ஹெலிபேட்.. 70 ஆயிரம்..

Update: 2023-11-25 04:54 GMT

சபரிமலையில் கண்காணிப்பை அதிகரிக்க ஹெலிபேட் அவசியம் என, கேரள அரசுக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர். குறிப்பாக நேற்று மட்டும் ஒரேநாளில் 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பிற்கான கண்காணிப்பை அதிகரிக்கவும், அவசர காலகட்டங்களில் பக்தர்களை வேகமாக வெளியேற்ற வசதியாகவும், சபரிமலையில் ஹெலிபேட் அவசியம் தேவை என கேரள அரசுக்கு போலீசார் பரிந்துரைத்துள்ளனர். மேலும் சன்னிதான ஓட்டல்களில் உள்ள எல்.ஜி.பி. சிலிண்டர்களை பாதுகாப்பாக வைக்க சேமிப்பு வசதியும், பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு சரக்குகளை கொண்டு செல்ல ரோப்-வே அமைப்பு தேவை என்றும் போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்