3,000 அடி உயர திருப்பதி மலையில் கயிறு கட்டி ஏறி பக்தர் செய்த செயல் - "இதனை யாரும் முயற்சிக்காதீர்"
3,000 அடி உயர திருப்பதி மலையில் கயிறு கட்டி ஏறி பக்தர் செய்த செயல் - "இதனை யாரும் முயற்சிக்காதீர்"
திருப்பதி மலை மீது ஆபத்தான நிலையில் கயிறு கட்டி ஏறி பாறையை ஏழுமலையானாக கருதி பூஜை செய்வது வாடிக்கையாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் வழியில் உள்ள மலையில் இருக்கும் பாறையில் ஏழுமலையான் உருவம் இருப்பதாக கூறப்படுகிறது.
உள்ளூரை சேர்ந்த சிலர் ஆபத்தான நிலையில் 3ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் மலை மீது கயிறு கட்டி ஏறி பாறைக்கு ராட்சத மாலை சூட்டி ஆரத்தி எடுத்தனர்.
மலைப்பகுதி மிகவும் ஆபத்தான இடம் என்பதால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி உயிரை பணயம் வைத்து அரங்கேற்கும் பக்தர்களின் செயலால் அசம்பாவிதம் ஏற்படும் என கூறப்படுகிறது.
ஆபத்தான மலைப்பகுதிக்கு கயிறு கட்டி செல்வதை தடுக்க வனத்துறையினரும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.