15 வயது தாண்டாத 3 மகள்கள் - மன உளைச்சலில் இருந்த தந்தை - நடு இரவில் எழுந்து.. கொடூரம்
கேரள மாநிலம் கோட்டயத்தில் 3 மகள்களை கழுத்தறுத்துக் கொலை செய்ய முயற்சித்த தந்தை தற்கொலை செய்துகொண்டார். ராமபுரம் சேற்று குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோமொன்.... இவரைவிட்டு மனைவி பிரிந்து சென்ற நிலையில், தனது 3 மகள்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில், 15 வயதிற்கும் குறைவான தனது 3 மகள்களின் கழுத்தையும் அவர் அறுத்துள்ளார். பின்னர் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 மகள்களையும் மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.