இன்று முதல் அமலான புதிய விதிமுறைகள்!

2022-23 பட்ஜெட்டில், வருமான வரி சட்ட விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், இன்று முதல் அமலாகின்றன.

Update: 2022-04-01 11:31 GMT
2022-23 பட்ஜெட்டில், வருமான வரி சட்ட விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், இன்று முதல் அமலாகின்றன. பி.எஃப் (P.F) கணக்கில் அரசு ஊழியர்கள் அல்லாதவர்கள், 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிக்கும் தொகைக்கான வட்டிக்கு, வருமான வரி விதிக்கப்படுகிறது. கிரிப்டோ நாணயங்கள் மூலம் ஈட்டப்படும் வருவாய் மீது 30 சதவீத வருமான வரி விதிக்கப்படுகிறது. முந்தைய ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி படிவங்களில் உள்ள பிழைகளை திருத்தி, மீண்டும் தாக்கல் செய்ய 2 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. கொரோனா சிகிச்சைக்காகவும், கொரோனா மரணத்திற்காகவும் நிறுவனங்கள் மற்றும் இதர தரப்பினரிடம் இருந்து பெறப்படும் தொகைகள் மீது வருமான வரி கிடையாது. மாற்று திறனாளிகளுக்கான காப்பீட்டு திட்டத்திற்கு, அவர்களின் பெற்றோர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும். தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு செலுத்தப்படும் தொகைகளை மொத்த வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ள மாநில அரசு ஊழியர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்