முகேஷ் அம்பானியை நெருங்கும் கெளதம் அதானி

இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான கெளதம் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் விலை கடந்த ஒரு மாதமாக வெகுவாக அதிகரித்துள்ளன.

Update: 2022-03-31 11:29 GMT
இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான கெளதம் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் விலை கடந்த ஒரு மாதமாக வெகுவாக அதிகரித்துள்ளன. இதன் பின்னணி பற்றி அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு ....அதானி பவர் நிறுவன பங்குகள் விலை பிப்ரவரி 28 இல் 123 ரூபாயாக இருந்தது, மார்ச் 30 இல் 37 சதவீதம் அதிகரித்து169 ரூபாயாக உயர்ந்துள்ளது.அதானி வில்மர் நிறுவன பங்குகள் விலை பிப்ரவரி 28இல் 379 ரூபாயாக இருந்தது, மார்ச் 30இல் 29 சதவீதம் அதிகரித்து 490 ரூபாயாக உயர்ந்துள்ளது.அதானி போர்ட்ஸ் (Adani Ports) நிறுவன பங்குகள் விலை பிப்ரவரி 28இல் 707 ரூபாயாக இருந்தது, மார்ச் 30இல் 8 சதவீதம் அதிகரித்து 765 ரூபாயாக உயர்ந்துள்ளது.அதானி டோட்டல் கேஸ் (Adani Total Gas) நிறுவன பங்குகள் விலை பிப்ரவரி 28இல் 1,587 ரூபாயாக இருந்தது, மார்ச் 30இல் 33 சதவீதம் அதிகரித்து 2,117 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதானி எண்ட்டர் பிரைசஸ் (enterprises) நிறுவன பங்குகள் விலை பிப்ரவரி 28இல்1,643 ரூபாயாக இருந்தது, மார்ச் 30இல் 21 சதவீதம் அதிகரித்து 1,990 ரூபாயாக உயர்ந்துள்ளது.இதன் விளைவாக அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு தற்போது ரூ. 13.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.அதானி குழுமத்தில் உள்ள நிறுவனங்களில் பெரும்பான்மை பங்குகள் கெளதம் அதானிக்கு சொந்தம் என்பதால், அவரின் சொத்து மதிப்பு கடந்த இரண்டு நாட்களில் 15,262 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது.அதானியின் மொத்த சொத்து மதிப்பு7.36 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்தியா மற்றும் ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது 7.45 லட்சம் கோடி ரூபாயாக உள்ள நிலையில், அதானி, முகேஷ் அம்பானியை நெருங்கியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்