சித்திரை ஆட்ட திருநாளை முன்னிட்டு திறப்பு - ஒரு நாள் மட்டும் ஐயப்பனை தரிசிக்க அனுமதி
சித்திரை ஆட்ட திருநாளை முன்னிட்டு இன்று ஒருநாள் மட்டும் பக்தர்களை அனுமதிப்பதாக சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் திருவாங்கூர் மகாராஜாவின் பிறந்த நாளையோட்டி ஐப்பசியில் ஒரு நாள் மட்டும் ஐயப்பன் கோவில் நடை திறப்பது வழக்கம். அந்த வகையில், நேற்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு தீபாரதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து இன்று சித்திரை ஆட்ட திருநாள் என்பாதால் கோவில் நடை திறக்கப்பட்டதுடன் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.