பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா: பள்ளியை இழுத்து மூடி சீல் வைத்த அதிகாரிகள்

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே தனியார் பள்ளியில் பயிலும் 60 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Update: 2021-09-29 06:46 GMT
கர்நாடகா மாநிலத்தில் எட்டாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் பெங்களூரு அருகே ஆனேக்கல் பகுதியில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளி விடுதியில் தங்கியிருந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையில் 60 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. பள்ளி வளாகம் மூடி சீல் வைக்கப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா பாதிப்புக்குள்ளான மாணவர்களும், விடுதியில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்ததால், அவர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பியதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்