விரைவில் இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் துருவ் - ஏவுகணையை அடையாளம் கண்டு எச்சரிக்கும்...

இந்தியாவை நோக்கிவரும் எதிரிநாட்டு ஏவுகணைகள் மற்றும் இந்திய பகுதிகளை கண்காணிக்கும் செயற்கைக்கோள்களை அடையாளம் காணும் விதமான ஐஎன்எஸ் துருவ் 'பெருங்கடல் கண்காணிப்பு' கப்பல் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-09-04 12:18 GMT
இந்தியாவை நோக்கிவரும் எதிரிநாட்டு ஏவுகணைகள் மற்றும் இந்திய பகுதிகளை கண்காணிக்கும் செயற்கைக்கோள்களை அடையாளம் காணும் விதமான  ஐஎன்எஸ் துருவ் 'பெருங்கடல் கண்காணிப்பு' கப்பல் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.இந்திய கடற்படைக்கு 750 கோடி ரூபாய் மதிப்பில் பெருங்கடல் கண்காணிப்பு கப்பலை கட்டும் பணி கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கியது.நேரடியாக பிரதமர் அலுவலக கண்காணிப்பில் தொடங்கிய பணியில், இந்திய ராணுவ ஆராய்ச்சி  மற்றும் மேம்பாட்டு நிறுவமான டி.ஆர்.டி.ஓ., தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான என்.டி.ஆர்.ஓ. உடன் இணைந்து இந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவனத்தால் விசாகப்பட்டினத்தில் கப்பல் கட்டப்பட்டது.பொதுவாக VC 11184 எனக் குறிப்பிடப்பட்டுவந்த ஐ.என்.எஸ். துருவ் கப்பல் முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பெருங்கடல் கண்காணிப்பு கப்பலாகும்.175 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பல் சுமார் 10 ஆயிரம் டன் எடைக்கொண்டது.ஐ.என்.எஸ். துருவ் கப்பலில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன மின்னணு ரேடார்கள் மூலம், 
இந்திய பகுதிகளை கண்காணிக்கும் செயற்கைக்கோள்கை எளிதாக அடையாளம் காண முடியும்.இந்திய நகரங்கள், ராணுவ கட்டமைப்புகளை நோக்கிவரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை அடையாளம் காண முடியும்.  
இந்தியாவுடன் எல்லை பிரச்சினையை கொண்டிருக்கும் சீனாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை கொண்ட நாடுகளாகும். அப்படியிருக்கும் சூழலில் ஏவுகணைகளை அடையாளம் காணும் விதமான ஐ.என்.எஸ். துருவ் இந்திய கடற்படை பாதுகாப்பிற்கு மேலும் வலுசேர்க்கும்.ஐ.என்.எஸ். துருவ் கப்பல் மூலம், ஏடன் வளைகூடா முதல் மலாக்கா, லம்போ வழியாக தெற்கு சீன கடல் பகுதியையும் கண்காணிக்க முடியும்.கடந்த 2018 ஆம் ஆண்டு கப்பல் கட்டும் பணி முடிக்கப்பட்டதை தொடர்ந்து, சோதனை ஓட்டத்தை தொடங்கிய கப்பல் விரைவில் இந்திய கடற்படையில் இணைவிருக்கிறது.தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் வரும் 10 ஆம் தேதி ஐ.என்.எஸ். துருவ் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐஎன்எஸ் துருவ் கப்பல் இந்திய கடற்படையில் இணையும்பட்சத்தில், பெருங்கடல் கண்காணிப்பு கப்பல்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பிடிக்கும்.அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, பிரான்ஸ் வரிசையில் 6 ஆவதாக இந்தியா இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்