"இந்தியர்களை மீட்க நடவடிக்கை" - வெளியுறவு துறை அமைச்சகம் தகவல்
காபூல் விமான நிலையம் திறந்ததும் எஞ்சிய இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைபற்றியுள்ள நிலையில் ஏராளமான மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக 249 பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் இந்தியர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் மற்ற நாடுகள் மூலம் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களையும் மீட்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.