ஆக்சிஜன் சிலிண்டரை நிறுத்தியவருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் - தமிழிசை வலியுறுத்தல்

தெலுங்கானா மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டரை நிறுத்தியவருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-31 10:53 GMT
 தெலுங்கானாவில் உள்ள நிஜாமாபாத் அரசு மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் ஆக்சிஜன் சிலிண்டரை நிறுத்தியதாகவும், வருமானத்திற்காக அவர் இதைச் செய்ததாகவும் செய்தி வெளியானது. இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, ஆக்சிஜன் சிலிண்டரை நிறுத்தியவர், கள்ளச்சந்தையில் மருந்துகள் விற்பனை செய்வோர் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்