பூஜை செய்து பிரசாதம் அனுப்பப்படும்; பிரதான கோவில்கள் பெயரில் ஆன்லைனில் மோசடி
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் தேவசம் வாரியத்தின் கீழ் உள்ள முக்கியமான கோவில்களில் பூஜை செய்து பிரசாதம் வழங்குவதாக, போலி வலைத்தளத்தை உருவாக்கி மோசடி நடைபெற்றது தெரியவந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் தேவசம் வாரியத்தின் கீழ் உள்ள முக்கியமான கோவில்களில் பூஜை செய்து பிரசாதம் வழங்குவதாக, போலி வலைத்தளத்தை உருவாக்கி மோசடி நடைபெற்றது தெரியவந்துள்ளது. இ-பூஜா என்ற வலைத்தளத்தை உருவாக்கி கொச்சின் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கொடுங்கல்லூர், சோட்டனிக்காரா, திரிபிரயார் மற்றும் வடக்குண்ணநாதன் போன்ற புகழ்பெற்ற 9 கோயில்களில் பூஜை செய்து , பிரசாதம் அனுப்பப்படும் என கூறி பக்தர்களை ஏமாற்றி உள்ளது தெரியவந்துள்ளது. திருச்சூரில் உள்ள பரமேகாவ், திருவம்பாடி கோயில்களில் பிரசாதம் மற்றும் பூஜைக்காக ஆன்லைனில் பலரிடம் இந்த நிறுவனம் பணம் பெற்று ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இது போன்ற வலைதளங்களை நம்ப வேண்டாம் எனவும், பக்தர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கொச்சின் தேவஸ்வம் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. இதேபோல மோசடி மலபார் தேவசம் போர்டு பெயரிலும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.