கேரள தங்க கடத்தல்:குற்றப்பத்திரிகை தாக்கல் - சாட்சியாக மாறினார் சந்தீப் நாயர்

கேரளா தங்க கடத்தல் வழக்கில் முக்கிய நதிகளான சுவப்னா சுரேஷ், சரித், ரெமீஸ் ஆகியோருக்கு எதிராக என் ஐ ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சந்திப் நாயர் சாட்சியாக மாற்றப்பட்டுள்ளார்.

Update: 2021-01-06 03:49 GMT
அமீரகத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு பார்கலில் பல கோடி மதிப்புடைய தங்கம் கடத்தப்பட்டது தொடர்பாக என் ஐ ஏ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. வழக்கில் சுவப்னா சுரேஷ், சரித், ரெமீஸ் ஆகியோர் உட்பட 30க்கும் மேற்பட்டோரிடம்   விசாரணை நடைபெற்று வந்த நிலையில், என்.ஐ.ஏ  டிஎஸ்பி ராதாகிருஷ்ண பிள்ளை கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். 30-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில்,  21 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். 7 பேர் நீதிமன்ற காவலில் உள்ளனர். தங்க கடத்தலுக்கு பணம் வழங்கியவர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சந்தீப் நாயர் ஏற்கனவே நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலம் அளித்த‌தால் அப்ரூவராக, மாற்றப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது. 21 பேர் கைதாகியுள்ள நிலையில், மீதமுள்ளவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என என்.ஐ.ஏ கூறியுள்ளது. 

 

Tags:    

மேலும் செய்திகள்